Study

வினைத்தொகை, உம்மை� ...

  •   0%
  •  0     0     0

  • 'வீசுதென்றல்' என்ற வினைத்தொகையை முக்காலத்திலும் கூறுக.
    வீசியது, வீசுகின்றது, வீசும்
  • முதலில் வரும் சொல்லானது வினையாகவும் இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாகவும் இருக்கும். அது என்ன?
    வினைத்தொகை
  • 'உம்மைத்தொகையில் வலிமிகும்'. சரி/தவறு ?
    தவறு
  • வினைத்தொகை என்றால் என்ன?
    வினைச்சொல்லின் பகுதியும் பெயர்ச் சொல்லும் சேர்ந்து வரும். மூன்று காலமும் மறைந்தும் வலிமிகாமல் வரும்.
  • 'செய்தொழில்' என்பது வினைத்தொகையா அல்லது உம்மைத்தொகையா?
    வினைத்தொகை
  • சரி, தவறு என குறிப்பிடுக. 'நன்மைதீமை' என்பது உம்மைத்தொடராகும்.
    தவறு. உம்மைத்தொகை
  • 'அகமும் புறமும்' என்ற உம்மைத்தொடரை உம்மைத்தொகையாக மாற்றுக.
    அகம்புறம்.
  • படர்கொடி என்பது _______________ ஆகும்.
    வினைத்தொகை
  • உம்மைத்தொகை என்றால் என்ன?
    'உம்' என்னும் உருபு மறைந்து வரும்.