ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் 900 வாகனங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் இரண்டு சக்கர வாகனங்கள் 450 எனில் நான்கு சக்கர வாகனங்கள் எத்தனை?
”450”
ஒரு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை 14000. அதில் 8000 பேர் ஆண்கள் எனில் பெண்கள் எத்தனை பேர்?
6000
ஒரு கேக் செய்யும் நிறுவனத்திற்கு கேக் செய்ய ஒரு நாளைக்கு 30000 முட்டைகள் தேவைப்படுகின்றன. 15000 முட்டைகள் நிறுவனத்திற்கு வந்துவிட்டன எனில் இன்னும் தேவைப்படும் முட்டைகள் எத்தனை?
”15000”
ஒரு பல்கலைக்கழகத்தில் 20000 மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் கல்வியில் சிறந்து விளங்குபவர் 13000 பேர், மீதி பேர் அனைவரும் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள். விளையாட்டில் சிறந்து விளங்குபவர்கள் எத்தனை பேர்?
” 17000”
ஒரு உணவு விடுதியில் ஒரு நாள் வரவு 157000 ரூபாய். அதில் 50000 ரூபாய் காலை நேர வரவு எனில் மாலை நேர வரவு எவ்வளவு?
”107000 ரூபாய்”
ஒரு பெருநகரத்தில் 8000 கார்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் 5500 கார்கள் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ளவர்கள் பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். எனில் பெட்ரோலை பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர்?
”2500”
ஒரு கைவினைப்பொருள் செய்யும் இடத்தில் ஒரு நாளைக்கு 5000 கிண்ணங்களை உற்பத்தி செய்வார்கள். காலை வேளையில் 2700 கிண்ணங்களை உற்பத்தி செய்துவிட்டனர் எனில் மாலைவேளையில் இன்னும் எத்தனை கிண்ணங்களை அவர்கள் உற்பத்தி செய்ய வேண்டும்?
”2300”
சேலத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு லாரியிலும், ஆட்டோவிலும் அனுப்பப்படும் மாம்பழங்களின் எண்ணிக்கை 200000. இதில் 18000 மாம்பழங்கள் ஆட்டோவில் அனுப்பப்பட்டுவிட்டன. எனில் லாரியில் அனுப்ப வேண்டிய மாம்பழங்கள் எத்தனை?
”182000”
ஒரு காட்டில் வாழும் விலங்குகளின் இந்த வருட கணக்கெடுப்பின் படி எண்ணிக்கை 37000. சென்ற வருட கணக்கெடுப்பின் படி எண்ணிக்கை 23000 எனில் இந்த வருடம் அதிகரித்த விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
”14000”
ஒரு புயல் காற்றினால் 20000 மரங்கள் இருந்த தென்னந்தோப்பில் 2000 மரங்கள் உடைந்துவிட்டன. எனில் மீதமுள்ள தென்னை மரங்கள் எத்தனை?
”18000”
Your experience on this site will be improved by allowing cookies.