ராமன் ஜூன் மாதம் 2350 கி.மீ தூரமும், ஜூலை மாதம் 1830 கி.மீ தூரமும் கப்பலில் பயணித்தான். அவன்கப்பலில் பயணித்த மொத்த தூரம் எவ்வளவு?
4180 கி.மீ
ஒரு நூலகத்திற்கு முதல் நாள் 1500 புத்தகங்கள் புதிதாக வாங்கப்பட்டது. இரண்டாம் நாள் 1200 புத்தகங்கள் வாங்கப்பட்டது. எனில் நூலகத்திற்கு புதியதாக வாங்கப்பட்ட புத்தகங்கள் மொத்தம் எத்தனை?
”2700”
ஊஞ்சலில் தருண் 450 முறையும், நிஷா 580 முறையும் விளையாடினார்கள்.இருவரும் சேர்ந்து எத்தனை முறை விளையாடினார்கள்?
”1030 முறை”
ஒரு ஊரில் உள்ள முதல் தெரு மக்களுக்கு 2830 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இரண்டாவது தெரு மக்களுக்கு 2500 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. எனில் மொத்த குடிநீரின் தேவை எவ்வளவு?
”5330 லி”
ஒரு ஊரில் கிணறு தூர்வாரும் பணி நடைப்பெற்றது. காலையில் 6374 முறை, மாலையில் 5394 முறை மண் தூர்வாரப்பட்டது. எனில் ஒரு நாளில் எத்தனை முறை தூர்வாரப்பட்டது?
”11768”
ஜாக்கியின் முதல் நாள் கார் பயணம் 340 கி.மீ, இரண்டாம் நாள் பயணம் 830 கி.மீ. ஜாக்கி பயணித்த மொத்த தூரம் எவ்வளவு?
1170 கி.மீ
கோகுல் தனது வீட்டினைக்கட்ட முதல் முறை 6875 செங்கற்களும், இரண்டாவது முறை 7525 செங்கற்களும் வாங்கினான். எனில் மொத்தம் அவன் வாங்கிய செங்கற்கள் எத்தனை?
” 14400”
தினேஷ் ஒரு மணி நேரத்தில் 1600 வரிகளை படித்தான். அடுத்த 1 மணி நேரத்தில் 1000 வரிகளைப் படிக்கிறான் எனில் அவன் வாசித்த மொத்த வரிகள் எத்தனை?
”2600 வரிகள் “
தீபிகாவின் பால்பண்ணையில் உள்ள மாடுகள் 12300. மீண்டும் அவள் 12200 மாடுகளை வாங்குகிறாள் எனில் பால்பண்ணையில் உள்ள மொத்த மாடுகள் எத்தனை?
” 24500 மாடுகள்”
சஹானாவின் பூந்தோட்டத்தில் காலையில் 2780 மலர்களும், மாலையில் 2745 மலர்களும் மலர்ந்தன எனில், ஒரு நாளில் மொத்தம் மலர்ந்த மலர்கள் எத்தனை?
”5525 மலர்கள்”
சேலத்தில் முதல் நாள் மழை 18000 கன அடியாகவும், இரண்டாம் நாள் 12000 கன அடியாகவும் பதிவானது. எனில் மொத்தம் எவ்வளவு மழை பொழிந்தது?
”30000 கன அடி”
ராகுலின் வாழைப்பழ தோட்டத்தில் இருந்து முதல் நாள் 18500 ரூபாயிற்கு வாழைப்பழங்களை விற்றான்.இரண்டாம் நாள் 25300 ரூபாயிற்கு விற்றான் எனில் இரண்டு நாட்களில் அவன் விற்ற வாழைப்பழங்களின் மொத்த தொகை எவ்வளவு?
ரூ. 43800
அனு சைக்கிளில் சென்று தனது தாத்தாவிடம் 4700 ரூபாயும், தனது மாமாவிடம் 3000 ரூபாயும் , அக்காவிடம் இருந்து 2000 ரூபாயும் வாங்கிச் சென்று தனது அம்மாவிடம் கொடுத்தாள். எனில் அவள் வாங்கி வந்த மொத்த தொகை எவ்வளவு?
”9700 ரூபாய்”
ரியா தனது நிலத்தை சமன்செய்கிறாள். முதல் வாரம் 2300 சதுர அடியையும், இரண்டாவது வாரம் 3700 சதுர அடியையும் சமன்படுத்தினாள். எனில் அவளது மொத்தத் தோட்டத்தின் அளவு என்ன?
” 6000 சதுர அடி”
Your experience on this site will be improved by allowing cookies.